அடியே !
இராசாத்தி
எங்கே செல்கிறாய் ?
ஒரு கையில் பிள்ளை,,
அடி நெஞ்சிலொரு பிள்ளை
மறு கையில் கூடை,,,,
கூடையில் யாரடீ ?
உன்னவனைச் சுமந்து செல்கிறாயோ ?
இதயத்தோடு உரசிச் சுகித்தவன் ?
இதயக் கரைக் கூடையிலா?
எப்படி ?
எப்படியடீ ?
இத்தனை அழகாய்,,
ஆடைகள்.,,!
ஆபரணங்கள் !
உன்னை
அழகாய்த்தான் வைத்திருக்கிறானென்பது,,
உன்னைப் பார்த்தாலே தெரிகிறதடியே,,,
என்னவொரு சிருங்காரம் ?
இதனைத் தான் சிங்காரி என்பார்களோ ?
கொஞ்சம் சொல்லிவிட்டுச் செல்லடியே ?
எப்படி அந்த விந்தை ?
கொஞ்சம் பாடம் நடத்து,,
எனக்கானவனும் வராமலா ? போய் விடுவான் ?
நானும் உனைப் போல மாற வேண்டுமடியே?
உன் தோழி வரகுணமங்கை அல்லவா ?
நான் !
எனக்காகக் கொஞ்சம் இரங்கடி,,,
என் மேலும் இரக்கம் வையடீயே,,
என்னடீ
நகைக்கிறாய் ?
எனக்காகவும் கொஞ்சம் வாயத் திற,,,,,,,
ஹாஹாஹா,,
கூடையில் எடுத்துச் செல்ல,,
என்னவரொன்றும் குழந்தையில்லையடீ ? தோழியே
என்னவர் !
எனக்கானவரைச் சந்திக்கச் செல்கிறேன் !
அது மட்டுமல்ல,,,
என்னவருக்கு பிடித்தமானவைகளை மட்டுமே ?
சுமந்து செல்கிறேன் என்கிற உணர்வே,,,
என்னை அழகாகக் காட்டுகிறதடீயே,,,
அந்த மகிழ்வின்
பிராவாகம் மட்டுமே,,
இப்போது என் முகத்திலடீயே,,
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்,,,
பழமொழி படித்திலையோ ? வரகுண மங்காய்,,,,
அதனால் தானடியே,,,
முன்னூறு வருடங்களுக்குப் பிறகும்,,,
சங்ககிரி கோட்டை, பெருமாள் கோவிலில்
அழகாய்த் தெரிகிறேனடீயே
No comments:
Post a Comment