Wednesday, 11 April 2018

சங்ககிரி கோட்டை, பெருமாள் கோவில் இராசாத்தி


அடியே !
இராசாத்தி
எங்கே செல்கிறாய் ?
ஒரு கையில் பிள்ளை,,
அடி  நெஞ்சிலொரு பிள்ளை
மறு கையில் கூடை,,,,
கூடையில் யாரடீ ?
உன்னவனைச் சுமந்து செல்கிறாயோ ?

இதயத்தோடு உரசிச் சுகித்தவன் ?
இதயக் கரைக் கூடையிலா?
எப்படி ?
எப்படியடீ ?

இத்தனை அழகாய்,,
ஆடைகள்.,,!
ஆபரணங்கள் !
உன்னை
அழகாய்த்தான் வைத்திருக்கிறானென்பது,,
உன்னைப் பார்த்தாலே தெரிகிறதடியே,,,

என்னவொரு சிருங்காரம் ?
இதனைத் தான் சிங்காரி என்பார்களோ ?
கொஞ்சம் சொல்லிவிட்டுச் செல்லடியே ?

எப்படி அந்த விந்தை ?
கொஞ்சம் பாடம் நடத்து,,
எனக்கானவனும் வராமலா ? போய் விடுவான் ?
நானும் உனைப் போல மாற வேண்டுமடியே?
உன் தோழி வரகுணமங்கை அல்லவா ?
நான் !
எனக்காகக் கொஞ்சம் இரங்கடி,,,
என் மேலும் இரக்கம் வையடீயே,,

என்னடீ
நகைக்கிறாய் ?
எனக்காகவும் கொஞ்சம் வாயத் திற,,,,,,,

ஹாஹாஹா,,
கூடையில் எடுத்துச் செல்ல,,
என்னவரொன்றும் குழந்தையில்லையடீ ?  தோழியே

என்னவர் !
எனக்கானவரைச் சந்திக்கச் செல்கிறேன் !
அது மட்டுமல்ல,,,
 என்னவருக்கு பிடித்தமானவைகளை மட்டுமே ?
சுமந்து செல்கிறேன் என்கிற உணர்வே,,,
என்னை அழகாகக் காட்டுகிறதடீயே,,,

அந்த மகிழ்வின்
பிராவாகம் மட்டுமே,,
இப்போது என் முகத்திலடீயே,,
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்,,,
பழமொழி படித்திலையோ ? வரகுண மங்காய்,,,,

அதனால் தானடியே,,,
முன்னூறு வருடங்களுக்குப் பிறகும்,,,
சங்ககிரி கோட்டை, பெருமாள் கோவிலில்
அழகாய்த் தெரிகிறேனடீயே

Saturday, 29 October 2011

அப்பா ! என் அப்பா !

அப்பா ! அப்ப,,,நீ ,,,,இதனை,,,,?


ஆத்தங்கரை புரளும்,ஆலவிழுது உண்டு,,,!
ஆர்ப்பரிச்சு ஓடிவரும்,ஆத்து தண்ணி கண்டு,,
பாலக்கரையருகே,,,,,
பயந்து நான் நிக்கையிலே,,,,,,,,,,,,,,,,,,,,?



கத்தாழமுட்டி வெட்டி,,,,
என் இடுப்போட சேத்துக்கட்டி,,,,,,
தூக்கி எறிஞ்சவரே,,,! என் அய்யா..!
தண்ணியில மிதக்கிறன் நான்,,,,,,,என் அய்யா,,!



நீச்சல் படிச்சுபுட்டேன்,,,?
நீந்தி,நீந்தி,,,,களைச்சுப்புட்டேன்,,,,,,,,,,,,,,,,,,,!
அப்பா,,! நீ !
அப்ப,,,நீ இதனை,,எப்பத்தான் ,,,,கத்தீக..?



ஊரெல்லாம்,,,ஊறல் தண்ணியில மிதக்கையில,,,
ஊருணி தண்ணியில ,,,,,,நீஞ்ச வச்சு ,அழகு பாத்த,,,
அப்பா,,!
அப்ப ,,,நீ,,இதனை, எப்பத்தான், கத்தீக,,,,,,,,,,,,,,,!

ஆத்தா, சொன்னாளா?
அய்யா , சொன்னாரா?
யாரு சொல்லி,,,நீ அறிஞ்ச,,,?
அப்பா,,நீ,,இதனை எப்படித்தான்,,,,நீ அறிஞ்ச,,,,,,,,,,,,,,?



நீ, அறிஞ்ச கதையெல்லாம்,
நானறிய, சொன்னவரே,,?
நாளும், பொழுதெல்லாம்,நானிப்ப,,,,,,,,,,,நினைக்கையிலே,,,?
தண்ணிக்குள்ளும்,,,,,,,,,,,,,கண்ணீரு? உப்பா கரிக்குதய்யா?..............



வேனல் கட்டி,வெயிலு கட்டி,,,
தேகமெல்லாம்,,,ஆத்தா அவ,,!
பொத்துகிட்டு, கொப்பளமாய் கொதிக்கையிலே ?
அப்பா ! நீ!,,

வேப்ப மரம் ஒடிச்ச,,,,
வாழைக் குலை முறிச்ச,,,
தென்னை இளநீரும்,
பனையோட பதநீரும்,,,,,,,,,,,,,,,



பக்குவமாய்,,நீ தந்து பாழும் வலிகுறைச்ச,,,,
பாழாகிப் போயிடுமோ ? என்று ,,பயந்த முகம்,,
பாலாகிப்போனதய்யா ! என் அப்பா !
அப்ப ,,நீ,,இதனை எப்பத்தான் கத்தீக,,,,,,,,,,,,,,?

ஊரைச் சுற்றி குளம் இருக்க,,,,,,,,,
குளத்துத் தண்ணிக்கெல்லாம்,, கரையிருக்க,,,,,,,,,,,,
நான் குளிச்ச நேரமெல்லாம்,,,,,,,,,,
கரையோரம்,சிரித்தபடி, நீயிருக்க,


தண்ணிக்குள்ள மீனிருந்து,
புண் அழுத்திக் கடிக்கையில,,,,,
நான், கத்தி ,அலறியடிக்கையில,,,,,
சிதறிய தண்ணி பட்டு,,, சிலிர்த்த படி,



புண்ணு குணமாகும்,
ஊனுடம்பு ,,பொன்னாகும்,,!
பொறுடா!...மகனே,,! பொறுத்திடடா?,,என்று சொன்ன,
அப்பா ! நீ, இதனை எப்பத்தான் கத்தீக,,,,,,,,,,,,,,,?


சுடலை மாடன் கோயிலிலே,கோழியறுத்து பொங்கலிட,
இனத்தோட போகையிலே,,,
பேச்சிக்கு,,,கோழி யறுக்கையிலே,,,,,,குங்குமம் சாத்தையிலே,,,,,,,,,,,,,,
சுடலைக்கு, ஆடு வெட்டையிலே,,,

சாமியாடி,,சூலங்கத்தியோட ,,,ஆடயிலே,,
என் கண்ணுமூடி,,,,? தோள் மீது, சாய்ச்சவரே..!
என் அப்பா !
கறிசோறு ஆனவுடன்,தட்டியெழுப்பியென்னை,
சாப்பிட வச்சவரே,,,!என் அப்பா !
அப்ப, நீ, இதனை எப்பத்தான்,கத்தீக,,,,,,,,,,,,,,?


கோயில் திருவிழா தான்,,,அம்மன் ஊர்வலம் தான்,,,,,,
கொட்டுமுண்டு,முரசுமுண்டு,,,,கூடவே கரகமுண்டு,,,,,,
அத்தனையும்,நான் பார்க்கவேணுமின்னு,
தோள் மீது வைத்தென்னை, சுமந்தபடி நடந்தவரே...!
என் அப்பா !அப்ப, நீ ! இதனை எப்பத்தான் கத்தீக,,,,,,,,,,,,,,,,,,,,,?


மாலை பல சூடி ,,,மங்கலமாய், அம்மன் வலம் வருகையில...
கொட்டடிச்சு,முரசடிச்சு,நாதஸ்வரம் ஊதயில,,,,,,
ஜிகினா மினுமினுங்க,சிலுக்கு துணியோட,,,
கிளிக்கரகம்,பூங்கரகம், சுமந்தபடி....கரகாட்டகாரியெல்லாம்,,,,,,,,,,,,,


கை வீசி,கண்வீசி ,,தெருவெல்லாம் ஆடயில,,,
எல்லா மம்முத மாப்பிள்ளை யாம்பிளையும்,,
பரிசு பணத்தையெல்லாம்,கரகாட்டக்காரியவள்,,,,,,
மார் மீது, கை வைக்கும் ,,,ஆசையில,,,,



மாராப்பில்,குத்தையில,,,,,,,,
கட்டமிட்ட துண்டு, வாங்கி,,,கரகாட்டக்காரியவள்,,,,,,,,,,,,,,,
மாராப்பில், போர்த்திவிட்டு,,
மார்பை மறைத்தவரே !
என் அப்பா !அப்ப, நீ , இதனை எப்பத்தான்,,, கத்தீக....................?


மார்பை மறைத்தவரை,,,
மம்முதனாய்ப் பார்த்தபடி,,,,
உன் தோள் மீது இருந்தபடி,,,,,
கைதட்டி, சிரிக்கின்ற எனைப் பார்த்தபடி,,,,
கண்ணெல்லாம்,நீர்க் கோர்த்தபடி.....


காலெடுத்து நடை நடந்து,,,                                        
கையெடுத்து, கரம் தொடுத்து,,,,,,
என் கன்னம், தொட்டு,பூவாய்த் தட்டி,,,
நெட்டி முறித்தவளை,,,
பூங்கரகம்,,,,, சுமந்தவளை,,,,
என்னவென்று,,,,? நானழைக்க,,,,,,?
என் அப்பா !
அப்ப.நீ ! இதனை எப்பத்தான்,கத்தீக.............?



அன்புடன் என்றும், அ.வேலுப்பிள்ளை.

Wednesday, 4 May 2011

nanthavanam




I Shall be a voice,without form,,,,,,,,,,,,,,,